வீடு புகுந்து கொள்ளையடித்த தாய்-மகன் கைது


வீடு புகுந்து கொள்ளையடித்த தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து கொள்ளையடித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் அருகே உள்ள பீர்க்கலைக்காடு கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மல்லிகா வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 20ஆயிரம் கொள்ளைபோனது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சேவியர், பார்த்திபன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியை சேர்ந்த நாகராஜன்(வயது19) மற்றும் அவரது தயார் சாந்தி ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தாய்- மகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story