வேலூர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் வக்கீல் நந்தினி கையெழுத்து இயக்கம்; மதுரையில் தொடங்கினார்
மதுரையில் இருந்து வேலூர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் வக்கீல் நந்தினி கையெழுத்து பெறும் இயக்கத்தை நேற்று தொடங்கினார்.
மதுரை,
மதுக்கடைகளை மூடவலியுறுத்தி வக்கீல் நந்தினி தனது தந்தை மற்றும் சகோதரியுடன் போராடி வருகிறார். மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தந்தையுடன் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் குணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதைதொடர்ந்து நந்தினி தனது கணவர் குணாவுடன் இணைந்து நேற்று மதுரையில் மது ஒழிப்பு போராட்டத்தை மீண்டும் தொடங்கினார். மேலும் அவர், கணவர் குணா மற்றும் தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மதுரையில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். வழியில் அவர் தல்லாகுளம், கோரிப்பாளையம், பெரியார், ஆரப்பாளையம், காளவாசல், பரவை, சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர், மதுவுக்கு எதிராக கையெழுத்து வாங்கினார்.
இதுகுறித்து நந்தினி கூறும்போது, “மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்க பயணம் இது. தேர்தல் நடக்கும் வேலூர் வரை நாங்கள் செல்கிறோம். பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள் அனைத்தையும் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியிடம் ஒப்படைப்போம்” என்றார்.
இதற்கிடையே அவர் தமிழக டி.ஜி.பி. திரிபாதி மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளதாகவும், அதற்கு காவல்துறையால் எவ்வித இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு உத்தரவாதம் வழங்குமாறு கூறியுள்ளார்.

Related Tags :
Next Story