இன்று ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிப்பு
இன்று (புதன்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம்,
இன்று (புதன்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இறந்த முன்னோருக்கு இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைப்பகுதிகளில் பொதுமக்கள் குவிவார்கள்.
அதுபோல் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் அதிக அளவில் வருவது உண்டு. இதையொட்டி ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மா மண்டபம் படித்துறை சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் குவிப்பு
படித்துறையின் கரைப்பகுதியில் புரோகிதர்கள் அமர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தற்போது நடுப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணல்வெளியிலும் புரோகிதர்கள் அமருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா மண்டபம் படித்துறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அங்கு குவிக்கப்பட்டனர். மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் காலை முதல் மதியம் வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மா மண்டபம் சாலையில் போக்குவரத்தை மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்தால் வாகனங்கள் திருப்பி விடப்படும் என்றனர். மேலும் பொதுமக்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் வகையில் இட வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story