தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
ஓய்வூதிய நிதி காப்பகத்திற்கு போக்குவரத்து கழகங்கள் நிலுவையில் உள்ள தொகையினை உடனடியாக செலுத்துவதுடன் ஓய்வூதிய நிதி காப்பகம் மாதத்தின் முதல் தேதியே ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த உயர்வு ஓய்வூதியத்துடன் உயர்த்தி வழங்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருவதாகவும் எனவே, ஓய்வூதியர்களுக்கும் ஊதிய ஒப்பந்த பலன்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலுவை ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ரூ.1,093 கோடி அறிவித்ததை வரவேற்றாலும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அது ஏமாற்றத்தை அளிப்பதால் கூடுதலாக ரூ.250 கோடி உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அகவிலைப்படி ஊதிய உயர்வை ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், மருத்துவ ரீதியில் ஓய்வு பெற்றவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story