காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் நினைவு தினம்; முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி
காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.
காலாப்பட்டு,
புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத் தலைவருமான ஜோசப் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சாசன் தொழிலாளர்கள் ஊழியர் சங்கம், சாசன் பார்மலேஷன் ஊழியர்கள் நல சங்கம் மற்றும் ஜோசப் குடும்பத்தினர் சார்பில் பெரிய காலாப்பட்டு நான்கு முனை சந்திப்பில் ஜோசப் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு ஜோசப் உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சாசன் தொழிற்சாலை முன்பு உள்ள ஜோசப் சிலைக்கும், அவரது வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தி ஜோசப் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜோசப் ஆதரவாளர்கள், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலும், அவரது கல்லறை யிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story