பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது தாயால் கொல்லப்பட்ட சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருந்த கொடூரம்


பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது தாயால் கொல்லப்பட்ட சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருந்த கொடூரம்
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே மகன், மகள்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக கொலையான அந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

புனே,

புனே அருகே மகன், மகள்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக கொலையான அந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

பிணமாக மீட்பு

புனே மாவட்டம் பிம்பிரி-சிஞ்சுவாட் அருகே போசரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் தனது பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதுமட்டும் இன்றி கணவருக்கு நிலையான வருமானம் இல்லாததால், ஏற்பட்ட பண நெருக்கடியால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பார் என போலீசார் கருதினர்.

அவரது வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அதிர்ச்சி தகவல்

இந்தநிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வழக்கின் போக்கை மாற்றியுள்ளது. அந்த அறிக்கையில் கொலையான சிறுமிகள் இருவரும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பிரிவான ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், குற்றவாளியை அடையாளம் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட பெண் சமீபத்தில் தான் குடும்பத்துடன் அப்பகுதிக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story