சேலத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 July 2019 4:15 AM IST (Updated: 31 July 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 70). இவர் சம்பவத்தன்று சேலத்திற்கு வந்தார். பின்னர் சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, ஊருக்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் நாமக்கல் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 3 பெண்கள் வந்து எந்த ஊருக்கு போக வேண்டும் என்று கேட்டு நைசாக பேச்சு கொடுத்தனர்.

பின்னர் மூதாட்டியிடம் நீங்கள் கழுத்தில் அணிந்து இருக்கும் செயின் அறுந்து உள்ளது. இப்படியே பஸ்சில் போனால் கீழே விழுந்து விடும். எனவே செயினை கழற்றி கொடுங்கள். அதை பொட்டலமாக கட்டி கொடுக்கிறோம். பின்னர் வீட்டிற்கு சென்றதும் அதை சரி செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதை நம்பிய மூதாட்டி பவுன் செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்து உள்ளார். அப்போது 3 பேரும் மாறி, மாறி அந்த செயினை வாங்கி பார்த்தபடி இருந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள் செயினுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இது குறித்து புவனேஸ்வரி பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை அபேஸ் தெய்த 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Next Story