வானவில் : ஆடியோ பிளேயரும், வயர்லெஸ் ஸ்பீக்கரும்
எப்.ஐ.ஐ.ஓ. நிறுவனம் ‘எம் 11’ என்ற பெயரிலான அதிக திறன் மிக்க ஆடியோ பிளேயரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.39,990 ஆகும்.
இதில் வயர் மூலமும் வயர் இல்லாமலும் பல்வேறு இசை கருவிகளுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும். இந்த பிளேயர் 5.15 அங்குல தொடு திரையுடன் வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
மேலும் எப்.ஐ.ஐ.ஓ. மியூசிக் ஆப் மூலமும் இதை செயல்படுத்த முடியும். இதில் டிஜிட்டல் அனலாக் கன்வெர்ட்டர் (டி.ஏ.சி.) வசதி உள்ளது. விரைவாக சார்ஜ் ஆகக் கூடியது. இது வை- பை ஆடியோ மற்றும் ஏர் பிளேயில் செயல்படக் கூடியது. இந்த மியூசிக் பிளேயரை ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கருடன் இணைக்கலாம். அதற்கேற்ப 3.5 மி.மீ. ஜாக் உள்ளது. இதேபோல 2.5 மி.மீ மற்றும் 4.4 மி.மீ அளவிலான ஆடியோ அவுட்புட் வசதிகள் உள்ளன. இது புளூடூத் 4.2 இணைப்பிலும் செயல்படக் கூடியது.
போல்ட் ஆடியோ வைப்
போல்ட் ஆடியோ வைப் மிகச் சிறந்த வயர்லெஸ் ஸ்பீக்கராகும். இதன் விலை சுமார் ரூ.2,699. ஆப்பிள் ஏர் பாடில் உள்ள தொழில்நுட்பம் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. இரண்டு தனித்தனி ஸ்பீக்கர்கள் வயர்லெஸ் இணைப்பின்றி ஒன்றாக செயல்படுவது சிறப்பாகும். இதை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. போர்ட் உள்ளது.
புளூடூத் 4.2 இணைப்பு மூலமும் இதை செயல்படுத்தலாம். 10 மீட்டர் தூரத்துக்கு இசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் குவால்காம் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்8635 சிப்செட் உள்ளது. 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி நீண்ட நேரம் செயல்பட வழிவகுத்துள்ளது. தொடர்ந்து 8 மணி நேரம் பாடல்களைக் கேட்க இது உதவுகிறது. 399 கிராம் எடை கொண்ட இந்த ஸ்பீக்கர்கள் தற்போது கருப்பு நிறத்தில் வந்துள்ளன.
Related Tags :
Next Story