சமையலறை சாதனங்கள்
உணவுப் பொருட்களைப் பொருத்தமட்டில் வீட்டில் தயாரிப்பதே ஆரோக்கியமானது.
பிலிப்ஸ் பாஸ்தா, நூடுல்ஸ் மேக்கர்
வீட்டு உபயோக மின்னணு சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் பிலிப்ஸ் நிறுவனம் சமையலறைக்கு மிகவும் அவசியமான பாஸ்தா, நூடுல்ஸ் மேக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உதவியால் வீட்டிலேயே விதவிதமான நூடுல்ஸ், பாஸ்தா ஆகியவற்றை தயாரித்து சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு அளிக்க முடியும். மாவையும், தேவையான தண்ணீரையும் ஊற்றிவிட்டால் 15 நிமிடத்தில் மாவை கலக்கி உங்களுக்குத் தேவையான பாஸ்தா அல்லது நூடுல்ஸை அளிக்கும். வித விதமான வடிவில் கிடைப்பதற்கு வசதியாக 4 அச்சுகளும் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்பெகட்டி, பெட்டூசினி, பெனீ, லஸாக்னே போன்றவற்றையும் தயாரிக்க முடியும். இந்த அச்சுகளை சுத்தம் செய்வதும் எளிது. நீங்கள் விரும்பும் சுவைக்கேற்ப முட்டை, கீரை, கேரட் போன்றவற்றையும் மாவுடன் சேர்த்து விருப்பமான நூடுல்ஸை தயாரிக்க முடியும். இயந்திரத்தின் அடிப்பகுதியில் தரப்பட்டுள்ள இடத்தில் அனைத்து உதிரி பாகங்களையும் அதாவது அச்சுக்களை போட்டு பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.21,000 ஆகும்.
நெஸ்ட்லேயின் நெஸ்பிரஸ்ஸோ
காபி, சாக்லெட் சார்ந்த உணவுப் பொருள் தயாரிப்பில் பிரபலமான நெஸ்ட்லே நிறுவனம் சூடான நுரை பொங்கும் பால் மற்றும் குளிர்ச்சியான நுரை பொங்கும் பால் தயாரிக்கும் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
பொத்தானை அழுத்துவதன் மூலம் சூடான மற்றும் குளிர்ச்சியான பாலை நுரை பொங்க பெறலாம். பாலை நுரை பொங்க தயாரிப்பதன் மூலம் காப்பச்சினோ போன்றவற்றை தயாரித்து சுவைபட பருக முடியும்.
இது 1.25 லிட்டர் கொள்ளவு கொண்டது. இருப்பினும் அளவை விட குறைவாக ஊற்றுவதன் மூலம் பால் பொங்குவது மற்றும் நுரை பொங்கி வெளியே சிந்துவதை தவிர்க்கலாம். மின்சாரத்தில் இயங்கும் இந்த கருவியின் அடிப்பாகம் மின் இணைப்புடனும், மேல் பகுதி கழற்றி மாட்டும் வகையில் இருப்பதால் இதை சுத்தம் செய்வதும் எளிது. இதன் விலை ரூ.5,500.
‘பிரஸ்டோ’வின் பீட்சா ஓவன்
உணவுப் பொருட்களைப் பொருத்தமட்டில் வீட்டில் தயாரிப்பதே ஆரோக்கியமானது. உடல் நலன் கருதியே பல பெண்களும் குழந்தைகள் விரும்பும் உணவுகளை வீட்டிலேயே தயாரித்து தர முயற்சிக்கின்றனர். அத்தகைய தாய்மார்களுக்கு மிகவும் உதவிகரமாக வந்துள்ளதுதான் ‘பிரஸ்டோ’ பீட்சா மேக்கர். இந்தக் கால குழந்தைகளுக்கு பீட்சா மீது தனியாத விருப்பம் உண்டு. ஓட்டலுக்கு சென்றோ அல்லது ஆர்டர் செய்தோ சாப்பிடுவதை விட வீட்டிலேயே தயாரித்து சாப்பிட தந்தால் குழந்தைகள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பீட்சா தயாரிப்பு மிகவும் சிரமம் என்ற கருத்தை போக்கி வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கிஉள்ளது பிரஸ்டோ பீட்சா மேக்கர்.
இதன் கீழ் பகுதி சுழலும் தன்மை கொண்டது. இதனால் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் உணவு நீங்கள் எதிர்பார்க்கும் சூட்டில் கிடைக்கிறது. உணவு எவ்வளவு நேரத்தில் பக்குவமாக தயாராகும் என்பதை நிர்ணயிக்க நேர வசதி (டைமர்) உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு இதில் உள்ள வெப்பம் தரும் பகுதி (ஹீட்டிங் பிளமென்ட்) அணைந்துவிடும். வழக்கமாக பெட்டி வடிவிலான ஓவனைக் காட்டிலும் 60 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கும் தன்மை கொண்டது. இதன் கீழ்ப்பகுதி கழற்றி மாட்டும் வகையில் உள்ளது. இதனால் எளிதில் சுத்தம் செய்ய முடியும். இதன் விலை ரூ.3,500 ஆகும்.
Related Tags :
Next Story