தஞ்சையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 31 July 2019 7:09 PM GMT)

தஞ்சையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இங்கு விளைவிக்கப்படும் நெல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் சேமிப்புக்கிடங்குகளிலும் இருப்பு வைக்கப்படும். இது தவிர நெல் மூட்டைகள் திருவள்ளூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

2,400 டன் புழுங்கல் அரிசி

அரவை முடிந்து அரிசி ஆலைகளில் இருந்து அரிசி மூட்டைகள் தஞ்சையில் உள்ள சேமிப்புக்கிடங்குகளில் கொண்டு வந்து இருப்பு வைக்கப்படும். சில நேரங்களில் அரிசியும் தஞ்சையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் 40 வேகன்களில் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story