மாவட்ட செய்திகள்

பொன்னமராவதி, ஆலங்குடியில் மருத்துவமனை தின விழா + "||" + Hospital day ceremony at Ponnamaravathi, Alangudi

பொன்னமராவதி, ஆலங்குடியில் மருத்துவமனை தின விழா

பொன்னமராவதி, ஆலங்குடியில் மருத்துவமனை தின விழா
பொன்னமராவதி, ஆலங்குடியில் மருத்துவமனை தின விழா கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி,

பொன்னமராவதி பாப்பா ஆச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த நாளையொட்டி மருத்துவமனை தின விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் தலைமை மருத்துவர் சதாசிவம் தலைமை தாங்கினார். மருத்துவர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாக ராஜன் ஆகியோர் பேசினர். இதில் பொன்னமராவதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தமிழ் செல்வி மற்றும் சித்த மருத்துவர் தாமரைச் செல்வன் ஆகியோர் சிறந்த மருத்துவர் சேவை பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொப்பனாபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாரிமுத்து தலைமையில் மருத்துவமனை தின விழா நடைபெற்றது. மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் அருண்குமார் தலைமையில் மருத்துவமனை தின விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணிகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப் பட்டது.

ஆலங்குடி

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா நடைபெற்றது. இதற்கு இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் மலர்விழி முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வலை காப்பு நடைபெற்றது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.