கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு


கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு
x
தினத்தந்தி 2 Aug 2019 4:00 AM IST (Updated: 1 Aug 2019 9:14 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி,

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சுசீந்திரம் ஆசிராமம் காசி திருமடம் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், இரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆராட்டு மண்டபத்தில் உற்சவ அம்மனை வைத்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

ஆராட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து வருடத்தில் 5 நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன், சுசீந்திரம் ஆசிராமம் காசி திருமட மேலாளர் சீனிவாசன், திருவாவடுதுறை ஆதீன மட ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story