விக்கிரவாண்டி அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி - ரவுடி கைது
விக்கிரவாண்டி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி கடைவீதி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் கேட்டுள்ளார். அதற்கு, நான் பெரிய ரவுடி என்று கூறியபடி சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமனை திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததோடு திடீரென தான் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றார்.
இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன், அங்கிருந்து நகர்ந்து கொண்டார். பின்னர் அந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்த சரவணன் மகன் வரதராஜ் என்கிற கைப்பிள்ளை ராஜ் (வயது 29) என்பதும், ரவுடியான இவர் மீது விழுப்புரம் தாலுகா மற்றும் விக்கிரவாண்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வரதராஜ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வரதராஜை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story