தூத்துக்குடியை மீண்டும் மிரட்டிய வெயில் மக்கள் கடும் அவதி
தூத்துக்குடியை வெயில் மீண்டும் மிரட்டியது. நேற்று 102 டிகிரி வெயில் அடித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியை வெயில் மீண்டும் மிரட்டியது. நேற்று 102 டிகிரி வெயில் அடித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
102 டிகிரி வெயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான வெயில் அடித்து வந்தது. பலத்த காற்று மற்றும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் 91 டிகிரி வெயிலே அடித்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி பதிவானது.
மக்கள் அவதி
இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களில் சென்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமானோர் குளிர்ப்பான கடைகளில் குவிந்ததை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story