முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு சி.ஐ.டி.யு. (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் துணைத் தலைவர்கள் ரெங்கராஜ், சண்முகம், துணை செயலாளர்கள் ரெங்கநாதன், ராஜகுமாரன், மாவட்ட குழு உறுப்பினர் சிவாநந்தம் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரம்பலூர் நகராட்சியில் வெண்டர்ஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உறுதிப் படுத்திட வேண்டும்.
வேறு மாநிலங்களில் உள்ளது போல், தமிழகத்திலும் நல வாரிய பணப்பயன்கள் கணிசமாக உயர்த்திட வேண்டும். நலவாரிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு விவாதித்து, ஒரே சீரான நடைமுறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்திட வேண்டும். சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பு உள்பட 4 சட்ட தொகுப்புகளை கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிடக்கோரி மாநில அரசு வலியுறுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து திருத்தங்களும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டும். புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story