கட்டுமாவடியில் கபடி போட்டி காரைக்குடி அணிக்கு முதல் பரிசு
கட்டுமாவடியில் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
மணமேல்குடி,
மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன. இதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அணி முதல் பரிசையும், 2-வது பரிசை நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் அணியும், 3-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம், கண்டியநாச்சி அணியும் பெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு அறந்தாங்கி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மணமேல்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சிறப்பாக ஆடிய அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்டுமாவடி, செம்பியன் மகாதேவிப்பட்டினம், கணேசபுரம் ஆகிய கிராமமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story