மாவட்ட செய்திகள்

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + Large number of devotees attending the Adipuram festival at Kuttalavai Kadambavaneswarar Temple

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குளித்தலை கடம்பவ னேசுவரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திரு விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவை யொட்டி கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி விக்னேசுவரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. கடந்த 27-ந்தேதி இக் கோவிலில் உள்ள அம்பாள் கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனைதொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் அன்று முதல் காலையில் பல்லக்கிலும், மாலையில் மஞ்சள் கேடயம், யாளி, அன்னம், தாமரை உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது.


தேரோட்டம்

இத்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு வெள்ளி ரிஷபவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது. பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
2. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
5. திருவாரூர் அருகே நடந்தது: விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவாரூர் அருகே விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.