மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது திராவகம் வீசிய வாலிபர் கைது + "||" + On the girl The liquid is throw The youth was arrested

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது திராவகம் வீசிய வாலிபர் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண் மீது திராவகம் வீசிய வாலிபர் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்: லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த திராவகத்தை(ஆசிட்) மோகனபிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கடை நடத்தி வருபவர் விவேகானந்தன் (வயது 28). இவரது மனைவி மோகனபிரியா(24). மோகனபிரியாவின் சகோதரிக்கும், ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையை சேர்ந்த டிரைவர் லோகேஷ் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


இதை அறிந்த மோகனபிரியா தனது சகோதரியை கண்டித்தார். இதனால் அவர் லோகேசை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த திராவகத்தை(ஆசிட்) மோகனபிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் லோகேசை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.