‘டிக்கால்’


‘டிக்கால்’
x
தினத்தந்தி 3 Aug 2019 3:30 AM IST (Updated: 2 Aug 2019 4:41 PM IST)
t-max-icont-min-icon

மயன்களின் மிகப் பெரிய, பழமையான நகரம் ‘டிக்கால்’.

கி.பி. 800-ம் ஆண்டுவாக்கில், ஐரோப்பா இருண்ட காலத்தில் மூழ்கியிருந்தது, வடஅமெரிக்காவில் பூர்வீக குடிகளான சிவப்பிந்தியர்கள் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமெரிக்காவில் ஒரு சிறப்பான நாகரிகம் உச்சத்தில் இருந்தது.

அதுதான், மயன்களின் நாகரிகம். கி.பி. 250-ல் தொடங்கிய அவர்களின் பொற்காலம், கி.பி. 900 வரை நீடித்தது.

மயன்கள் வானியலிலும் கணிதத்திலும் வெகுவாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களால் கோள்களின் நகர்வையும், கிரகணங்களையும் துல்லியமாகக் கணிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. வானியலில் மயன்களுக்கு இணையான நிபுணத்துவத்தை மனிதர்கள் 20-ம் நூற்றாண்டில்தான் எட்டினார்கள்.

மயன்களின் மிகப் பெரிய, பழமையான நகரமான ‘டிக்கால்’, 1848-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு குவாதிமாலாவில் அமைந்திருக்கும் இந்நகரில், பல பெருங்கோவில்களும் கட்டிடங்களும் அமைந்திருக்கின்றன. அவற்றுள், 52 மீட்டர் உயரமான ‘பெருஞ்சிறுத்தை பிரமிடு’ம், பிரபுக்களின் அரண்மனையும் அடங்கும்.

Next Story