மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல் + "||" + Apply for Fireworks Shop in Erode

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வியாபாரிகளின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே வியாபாரத்தை தொடங்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வெடிபொருள் விதிகள் 2008-ன்படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ரூ.500 சேவை கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


அவ்வாறு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன், 6 வரைபடங்கள், 6 கிரைய பத்திர நகல்கள், ரூ.500 சேவை கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான அடையாள அட்டை, சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். அதன்படி அதிகாரிகள் கொடுத்த பரிந்துரையின் பேரில் பரிசீலனை செய்யப்பட்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் ஆயுதங்களை ஒப்படைத்து 28 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஷ்காரில் ஆயுதங்களை ஒப்படைத்து 28 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
2. பாடாலூரில் பெண்ணை கடித்து குதறிய கொள்ளையர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
பாடாலூரில் பெண்ணை கடித்து குதறிய கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3. ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை, கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு - பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
4. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலைக்கு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வரவேற்றனர்.
5. பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மீட்பு-தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு துறைகளுக்கு ரூ.160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.