சேவை குறைபாடு: கூரியர் நிறுவனத்துக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

சேவை குறைபாடு: கூரியர் நிறுவனத்துக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2019 3:00 AM IST (Updated: 3 Aug 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சங்கர்நகர் காமராஜர் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் நெல்லையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனம் மூலம் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வரும் பாலாஜி என்பவருக்கு சித்த மருந்துகளை கடந்த 28-10-2016 அன்று அனுப்பினார். அதற்காக ரூ.320 செலுத்தி ரசீது பெற்றார்.

நெல்லை, 

இந்த பார்சல் 1-11-2016 அன்று பாலாஜிக்கு கிடைத்து விடும் என கூரியர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த தேதியில் மருந்துகள் போய் சேரவில்லை. இதுகுறித்து கண்ணன் கூரியர் நிறுவனத்தில் விளக்கம் கேட்டார். அவர்கள் சரியாக பதில் கூறாமல், அவதூறாக பேசினார். மேலும் அந்த மருந்து 4-11-2016 அன்று தாமதமாக பாலாஜியிடம் கிடைத்தது. அந்த சித்த மருந்தை அவர் முறையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த கண்ணன் வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி தேவதாஸ், உறுப்பினர் சிவன்மூர்த்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர். அதில், “சேவை குறைபாடு ஏற்படுத்திய கூரியர் நிறுவனம் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் கண்ணனுக்கு வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் செலுத்த தவறினால், 6 சதவீத வட்டியுடன் கட்ட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story