வீட்டு பொருட்களுடன் தெருவில் கிடந்த போலீஸ் நிலைய அபராத ரசீது புத்தகம்
திருப்பூரில் வீட்டுப்பொருட்களுடன் தெருவில் போலீஸ் நிலையை அபராத ரசீது புத்தகம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த சக்திநகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டின் முன்பு கட்டில், பீரோ, மேசை, நாற்காலி உள்ளிட்ட ஏராளமான வீட்டு சாமான்கள் கிடந்தன. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அந்த பொருட்கள் அதே இடத்தில் இருந்தும் அதை யாரும் எடுத்து செல்லாததால் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் பொருட்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த பொருட்களுடன் திருப்பூர் ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீல் மற்றும் கையெழுத்திட்ட போலீஸ் அபராத ரசீது புத்தகத்தின் அடிக்கட்டும் (ஸ்பாட் பைன் புக்) இருந்தது. இதனால் அந்த பொருட்கள் யாராவது போலீஸ்காரரின் பொருட்களாக இருக்கலாம் என்று பொதுமக்கள் நினைத்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தெருவில் கிடந்த பொருட்கள் குறித்தும், அதனுடன் இருந்த போலீஸ் அபராத ரசீது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். இதில் திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் அவர் பணியில் இருந்த போது அவருக்கு உதவியாக இருந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சேகர் என்பவருக்கு தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த பொருட்களுடன் அவர் ஊரக போலீஸ் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியபோது பயன்படுத்திய போலீஸ் அபராத ரசீதின் அடிக்கட்டையும் சேர்த்து கவனக்குறைவாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் சேகர் நேற்று முன்தினம் இரவு போயம்பாளையம் சக்திநகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி சென்றுள்ளார்.
இதற்காக அவருக்கு சொந்தமான பொருட்களை வேனில் ஏற்றி சென்று அங்குள்ள வீட்டின் முன்பு இறக்கி வைத்ததும் தெரிய வந்தது. அந்த பொருட்களுடனேயே அந்த அபராத ரசீதும் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. ஆனால் காலை வெகு நேரமாகியும் அந்த பொருட்களை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் தெருவிலேயே வைத்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Related Tags :
Next Story