சாகர்மாலா திட்டத்தின்கீழ் ரூ.44 கோடியில் உப்பளம் துறைமுகம் மேம்படுத்தும் பணி; பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது
புதுவை உப்பளம் துறைமுகம் சாகர்மாலா திட்டத்தின்கீழ் ரூ.44 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. அது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
புதுச்சேரி,
உப்பளம் பகுதியில் துறைமுகம் (புதிய துறைமுகம்) 1993-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது 2006-ம் ஆண்டுவரை உபயோகத்தில் இருந்தது. பின்னர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் துறைமுகம் இயக்கப்படாமல் முடங்கியதால் பராமரிப்பின்றி கிடக்கிறது.
இதனால் முகத்துவாரம் முதல் துறைமுகம் வரை கப்பல் மற்றும் படகு செல்லும் கால்வாயில் மண் படிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதி தூர்வாரப்பட்டு கப்பல் மூலம் சரக்கு கன்டெய்னர் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான வெள்ளோட்டமும் நடந்தது. ஆனால் இதுவரை கப்பல் போக்குவரத்து தொடங்கவில்லை.
இந்தநிலையில் மீண்டும் கப்பல், படகுகள் செல்ல முடியாத அளவுக்கு மணல் தேங்கி கிடக்கிறது. இதனால் தற்போது மத்திய அரசின் சாகர்மாலா (கடல் மாலை) திட்டத்தின்கீழ் ரூ.44 கோடி அளிக்கப்பட உள்ளது. அந்த நிதியைக்கொண்டு இந்த துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்து சிறு கப்பல்கள் மற்றும் படகுகள் தடையின்றி செல்ல பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி துறைமுகத்தின் உள்பகுதி மற்றும் கப்பல்கள் செல்லும் கால்வாயை ஆழப்படுத்துதல், தூர்வாரும்போது கிடைக்கும் மணலை கொண்டு வடக்கு பகுதி கரையை பலப்படுத்துதல் மற்றும் கழிமண் வகைகளை ஆழ்கடலில் கொட்டுதல் (கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலுக்குள் கொட்டுதல்), அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து திடக்கழிவுகள் துறைமுக நீரில் கலக்காமல் இருக்க நடவடிக்கை மற்றும் வடிகால் வாய்க்கால் மேல் நடைபாலம் அமைத்தல் போன்ற 3 அம்ச கோரிக்கைகளை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. அந்த திட்டத்தின்படி துறைமுக கால்வாயின் உள்பகுதி 5 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் துறைமுக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் சப்-கலெக்டர் சுதாகர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா, மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, துறைமுகத்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெகஜோதி ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டனர்.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மீனவர் காங்கேயன்:- ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்கள் மீனவர்களுக்கு எதிராக உள்ளன. அவற்றை நாங்கள் ஏற்கமாட்டோம். ஆனால் இந்த துறைமுக விரிவாக்க திட்டம் மீனவர்களுக்கு மிகுந்த பலனை தரும்.
மீனவர் சந்திரன்:- துறைமுகத்தை மறுகட்டுமானம் செய்து சீரமைக்கவேண்டும். 1978 முதலே முகத்துவாரத்தை தூர்வாரி வருகிறோம். மீண்டும் மீண்டும் மண் வந்து படிந்து விடுகிறது. இதை தடுக்க முகத்துவார பகுதியை குறுக்கவேண்டும். இந்த திட்டத்தை மீனவர்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ:- துறைமுக விரிவாக்க திட்டத்துக்காக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறவேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது கடல்மண் சுழற்சி, மீன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மீனவ மக்கள் கழக வீரமணி:- துறைமுக விரிவாக்கம் என்றால் வரவேற்கத்தக்கது. கடற்கரையோரம் சாலை திட்டங்களை செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களை பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மீனவர் விசுவநாதன்:- துறைமுக நுழைவு வாயில் பகுதியில் பாறாங்கற்களை கொட்டி குறுக்க வேண்டும் துறைமுக விரிவாக்கத்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பினை மீனவர்களுக்கே தரவேண்டும். கடற்கரையில் கல்கொட்ட வேண்டும் என்றால் அதற்கு தடை பெறுகிறார்கள். துறைமுக விரிவாக்க திட்டத்தை மட்டும் நான் ஆதரிக்கிறேன்.
மீனவர்களை வெளியேற்ற...
மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சி வெங்கடேச பெருமாள்:- இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை எப்படி மேலாண்மை செய்யப்போகிறீர்கள்? கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வெளியேற்றப்படுவார்களா? என்பதற்கு விளக்கம் அளிக்கவேண்டும். சாகர்மாலா திட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டம்.
நல்லாட்சிக்கான கூட்டு இயக்க பாலமோகனன்:- இந்த துறைமுக திட்டத்தால் கடலோர காடுகளை அழிக்கப்போகிறீர்களா? நாட்டில் வளர்ச்சி தேவைதான். அது நகரம் தாங்கும் அளவுக்கு இருக்கவேண்டும். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது. ஆனால் இந்த திட்டத்தை வர்த்தக அடிப்படையிலான எண்ணத்தில் மட்டும் செய்வதாக தெரிகிறது.
தொடர்ந்து மக்கள் நாடி அமைப்பினை சேர்ந்த தேவநாதன் என்பவர் இந்த திட்டத்தை பலர் எதிர்ப்பதாக கூறி தனது பேச்சை தொடங்கினார். அதற்கு மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவரை சுற்றி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசாரும், அதிகாரிகளும் அவர்களை சமரசப்படுத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெருமாள்:- மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் திட்டம் இது. இந்த திட்டம் மிகப்பெரிய ஆபத்தான திட்டம். மீன்பிடி துறைமுக விரிவாக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 7,500 கி.மீ. கடற் கரையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் சாகர்மாலா திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
மீனவர் போத்ராஜ்:- கால்வாயை ஆழப்படுத்தினால் மட்டும் எதையும் சரிசெய்ய முடியாது. துறைமுக முகத்துவாரத்தில் கல்லைகொட்டி அதை குறுக்க வேண்டும்.
இவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

Related Tags :
Next Story