தங்கள் கட்சியில் சேருமாறு ‘‘வர்ஷா பங்களா, மாதோஸ்ரீயில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன’’ எதிர்க்கட்சி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
‘‘தங்கள் கட்சியில் சேருமாறு வர்ஷா பங்களா, மாதோஸ்ரீயில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன’’ என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வாடேடிவார் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
‘‘தங்கள் கட்சியில் சேருமாறு வர்ஷா பங்களா, மாதோஸ்ரீயில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன’’ என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வாடேடிவார் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
குற்றச்சாட்டு
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து காங்கிரசை சேர்ந்த விஜய் வாடேடிவார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.
இந்தநிலையில் தன்னையும் சிவசேனா, பா.ஜனதாவினர் இழுக்க முயற்சி செய்வதாக விஜய் வாடேடிவார் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
அழைப்புகள் வந்தன
மாதோஸ்ரீயில்(உத்தவ்தாக்கரே இல்லம்) இருந்து எனக்கு பல முறை அழைப்புகள் வந்தன. ஆனால் அந்த அழைப்புகளை எடுக்கவில்லை. அதன்பிறகு முதல்-மந்திரியின் ‘வர்ஷா பங்களா’வில் இருந்தும் எனக்கு 2 முறை அழைப்புகள் வந்தன. கட்சி மாறுவது குறித்து பேச அவர்களிடம் மறுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியாக உள்ளேன். பா.ஜனதாவை போல சிவசேனாவும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தங்கள் கட்சியில் சேர்க்க வலைவிரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் வாடேடிவார் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story