புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 15 டன் பூக்களால் பூச்சொரிதல் - திரளான பக்தர்கள் தரிசனம்
ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 15 டன் பூக்களால் பூச்சொரிதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.
மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் அம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு தினசரி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா ஆடி 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது.
இதையொட்டி மாரியம்மன் கோவில், களஞ்சேரி, ராவுசாபட்டி, திருக்கானூர்பட்டி, நாஞ்சிக்கோட்டை, தெத்துவாசல்பட்டி, தோழகிரிப்பட்டி, வெள்ளாம்பெரம்பூர், கருப்பூர், திருவையாறு, வல்லம், பிள்ளையார்பட்டி, தஞ்சை கீழவாசல், அருள்மொழிப்பேட்டை, புலவர்நத்தம், களிமேடு, குருங்குளம், மாதாக்கோட்டை, முதுகுளம், திருக்கருக்காவூர் ஆகிய இடங்களில் இருந்து அம்மன் உருவப்படங்களுடன் கூடிய ரதங்கள் புறப்பட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தன.
அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைத்து ரதங்களும் புறப்பட்டன. பக்தர்கள் ஏராளமானோர் பூக்கூடைகளை கொடுத்தனர். இந்த பூக்கூடைகள் அனைத்தும் ரதத்தில் வாங்கி வைக்கப்பட்டன. பின்பு மேளதாளங்கள் முழங்க இந்த ரதங்கள் தஞ்சையில் உள்ள முக்கியவீதிகள் வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை வந்தடைந்தது.
நேற்று காலை மாரியம்மன்கோவில் தேரோடும் முக்கிய வீதிகளில் அம்மன் ரதங்கள் வலம் வந்தன. ரதத்தின் முன்பு சிறுவர்களின் கோலாட்டம் நடைபெற்றது. பின்பு புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 20 வகையான சுமார் 15 டன் பூக்களால் பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சுக்ரவார வழிபாட்டுக்குழு தலைவர் கேசவன், பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர். மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

Related Tags :
Next Story