மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா


மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 5:19 PM GMT)

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது. இதனை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கஞ்சி தயாரிக்கப்பட்டு கேசவராயன்பேட்டை வளாகத்தில் இருந்து மண்கலயங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு மேளதாளங்கள் முழங்க விழா பொறுப்பாளர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். லட்சுமி பங்காரு அடிகளாரால் எடுத்து வரப்பட்ட தாய்வீட்டு கஞ்சிக்கு சித்தர் பீடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக்கலயங்களை சுமந்தபடி பிரகாரத்தை சுற்றி வந்து கஞ்சி வார்க்கும் பள்ளி மைதானப்பகுதிக்கு சென்றனர்.

அங்கே அனைத்து பக்தர்களும் எடுத்து வந்த கஞ்சிகளும் ஒன்று சேர்க்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கஞ்சிவார்ப்பு நிகழ்ச்சியை இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவிரமேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் பால் அபிஷேகத்தை பங்காரு அகளார் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டீக்காராமன், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தென்னிந்திய ரெயில்வே அதிகாரி ஜெயந்த், கோவை மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மத்திய பாதுகாப்புபடை அதிகாரி மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால் அபிஷேகம் செய்தனர்.

Next Story