பெங்களூருவில் நடந்தது முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், ரோஷன் பெய்க் திடீர் சந்திப்பு


பெங்களூருவில் நடந்தது முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், ரோஷன் பெய்க் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 3:30 AM IST (Updated: 4 Aug 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், முதல்-மந்திரி எடியூரப்பாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரோஷன் பெய்க் சந்தித்து பேசினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில், முதல்-மந்திரி எடியூரப்பாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரோஷன் பெய்க் சந்தித்து பேசினார்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிவாஜிநகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் பெய்க்கும் ஒருவர் ஆவார்.

இந்த நிலையில், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் நேற்று காலையில் சென்றார். பின்னர் அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது தன்னை தகுதி நீக்கம் செய்திருப்பதால், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பா.ஜனதா கட்சியில் சேருவது குறித்து எடியூரப்பாவுடன் ரோஷன் பெய்க் ஆலோசித்ததாக தெரிகிறது.

சிறப்பு விசாரணை குழுவினர் தொல்லை

அதே நேரத்தில் தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், சிவாஜிநகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் தன்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் எடியூரப்பாவிடம் ரோஷன் பெய்க் வலியுறுத்தியதாக தெரிகிறது. அத்துடன் நகைக்கடை அதிபர் மன்சூர்கான் ரூ.1,640 கோடி மோசடி செய்த வழக்கில் தனக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி நோட்டீசு அனுப்பி தொல்லை கொடுப்பது தொடர்பாகவும் எடியூரப்பாவிடம் ரோஷன் பெய்க் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் எடியூரப்பா வீட்டில் இருந்து ரோஷன் பெய்க் புறப்பட்டு சென்றுவிட்டார்.

Next Story