லாரி மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானார்.
பரமத்திவேலூர்,
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரமத்தி வேலூர் அருகே உள்ள படமுடிபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் நிஷாந்த்குமார் (வயது 18). இவர் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, இவரும், இவரது நண்பரான பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் தினேஷ்குமாரும் (18) தெற்கு நல்லியாம்பாளையம் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பழைய தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுறவு வங்கி அருகே பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச்சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் நிஷாந்த்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த பிரசாந்தை (29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story