ரெயில் மறியல் செய்ய முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 40 பேர் கைது


ரெயில் மறியல் செய்ய முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 40 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2019 3:15 AM IST (Updated: 4 Aug 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மறியல் செய்ய முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் எரித்து கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்யப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்தனர். அதன்படி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் பலர் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுவன் எரித்து கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து ரெயில் மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 40 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மணிமாறன், சிவக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story