மாநில அந்தஸ்து விவகாரம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் யோசனை
மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எழுப்ப வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கும் எண்ணமில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஜனநாயக மாண்புகளுக்கும், மக்களின் நீண்ட கால விருப்பத்திற்கும் எதிரானது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் உடனடியாக மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி இவ்வளவு சீக்கிரம் பொய்த்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த பிரச்சினையில் சரியான அணுகுமுறை இல்லாமல், உண்மையான நடவடிக்கை எடுக்காமல் மாநில அந்தஸ்து மந்திரத்தால் வந்துவிடாது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கொள்கை அளவில் ஒத்துக்கொண்டது. 1998-ல் இருந்த பா.ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. சுஷ்மா சுவ்ராஜ் தலைமையிலான உள்துறை நிலைக்குழு மாநில அந்தஸ்து சம்பந்தமாக ஆய்வு செய்து புதுச்சேரிக்கு சிறப்பு தகுதியுடன் கூடிய தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையெல்லாம் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறை இருந்தால் மாநில அந்தஸ்து பற்றி ஒரு சாத்தியகூறு அறிக்கையை வல்லுனர் குழுவால் தயாரிக்க வேண்டும். அது குறித்து அரசின் செயலர் குழு ஒன்று உள்துறை அதிகாரிகளுடன் விவாதித்து மாநில அந்தஸ்து கோரும் நியாயத்தை உணர்த்த வேண்டும். முதல்-அமைச்சர் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து பிரதமர், உள்துறை மந்திரியிடம் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.
இந்த முயற்சிகள் 3 மாதங்களில் பழிக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி பிரதிநிதிகளின் கையொப்பம் பெற்ற விண்ணப்பத்தை பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட 10 பேர் அடங்கிய குழுவை உடனடியாக அமைத்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story