பாண்டி மெரினாவில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
புதுவை வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினாவில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுவையில் காலாப்பட்டு, திப்புராயப்பேட்டை, அரிக்கன்மேடு, சின்னவீராம்பட்டினம், சுண்ணாம்பாறு, மணப்பட்டு, நரம்பை கடற்கரை பகுதிகளை சுற்றுலா தலமாக மேம்படுத்திட மத்திய அரசு சுதேசி தர்சன் திட்டத்தின்கீழ் ரூ.70 கோடி வழங்குகிறது.
இந்த நிதியுதவியின் மூலம் திப்புராயப்பேட்டை (வம்பாகீரப்பாளையம்) பகுதியில் சுமார் ரூ.5 கோடி செலவில் பாண்டி மெரினா என்ற பெயரில் கடற்கரை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. சாலைகள், கடைகள், அழகிய மணல்பரப்பு என இந்த இடம் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.
பாண்டி மெரினா கடற் கரையில் புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மரக்கன்றுகளையும் நட்டார். மேலும் சூரியசக்தி விளக்குகள், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதுபோன்ற வசதிகளை தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள 7 பகுதிகளிலும் செய்ய கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவை மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்திருப்பது சிறந்தது என்றும், புதிய கல்விக்கொள்கை பற்றி முழுமையாக அறியாமல் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், செயற்பொறியாளர் பாஸ்கர், உதவிப்பொறியாளர் வல்லவன், சுற்றுலாத்துறை மேலாளர் ராமன், கவர்னர் மாளிகையின் தலைமை குறைதீர்ப்பு அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story