மனநலம் பாதித்த மனைவி கொலை தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவர் மாயம்
மனநலம் பாதித்த மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
புனே,
மனநலம் பாதித்த மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
மனநலம் பாதிப்பு
புனே வானேவாடி பகுதியை சேர்ந்தவர் ஹர்விந்தரசிங் (வயது78). ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவிந்திரா (66). இவருக்கு கடந்த 3 ஆண்டாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இவரது வீட்டின் அருகே மகன் ரமேந்திரா சிங் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அவர் தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் தாய் தேவிந்திரா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலை கடிதம்
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை நடத்தியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
இதில் தனது மனைவியின் மனநல பாதி்ப்பு குணமாகாததால் அவரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய போவதாக அதில் எழுதப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் அவரை பல இடங்களில் தேடியதில் எங்கும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story