இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும்: திருப்பாலை, மாட்டுத்தாவணியில் புதிய போலீஸ் நிலையங்கள் - மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
மதுரை திருப்பாலை மற்றும் மாட்டுத்தாவணியில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.
மதுரை,
இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் சசிமோகன், சுகுமார், உதவி போலீஸ் கமிஷனர்கள் அசோகன், லில்லி கிரேஸ், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, பெத்துராஜ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் கூறியதாவது:-
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தி உள்ளோம். மதுரை நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீஸ் அதிகாரிகள் சென்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், அதில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது கல்லூரி பெண்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளதாக எங்களிடம் தெரிவித்தனர்.
தற்போது பஸ் நிலையம் மற்றும் முக்கிய பஸ் நிறுத்தம், கல்லூரி, பள்ளி அருகே போலீசார் அதிக அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் புதிதாக 5 போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2 போலீஸ் நிலையங்கள் மதுரை நகரில் திருப்பாலை, மாட்டுத்தாவணியில் அமைய உள்ளது. இந்த புதிய போலீஸ் நிலையங்கள் அமைய உள்ள இடம், அதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய போலீஸ் நிலையங்கள் மதுரை நகரில் அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சிம்மக்கல் பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலும், வில்லாபுரத்திலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Related Tags :
Next Story