கூத்தாநல்லூர் அருகே தந்தை-தாய் மீது தாக்குதல் கொத்தனார் கைது


கூத்தாநல்லூர் அருகே தந்தை-தாய் மீது தாக்குதல் கொத்தனார் கைது
x
தினத்தந்தி 5 Aug 2019 3:45 AM IST (Updated: 5 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே தந்தை மற்றும் தாயை தாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரம் புனவாசல் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி பூமயில் (50). இவர்களது மகன் தினேஷ்குமார் (29). கொத்தனார். இவர் அதே தெருவில் தனது மனைவி புவனேஸ்வரியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் புவனேஸ்வரிக்கும், மாமனார்-மாமியார் ஆகியோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கைது

சம்பவத்தன்று 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வேலை முடித்து வீட்டிற்கு வந்த தினேஷ்குமாரிடம், தகராறு நடந்ததை புவனேஸ்வரி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், தந்தை சண்முகத்தையும், தாய் பூமயிலையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சண்முகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பூமயில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் பூமயில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story