கோயம்பேடு அருகே நடுரோட்டில் கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
கோயம்பேடு அருகே நடுரோட்டில் வழிமறித்து கால்டாக்சி டிரைவரை தாக்கி செல்போன், பணம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
அரும்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 35), கால்டாக்சி ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோயம்பேடு 100 அடி சாலை, எம்.எம்.டி.ஏ அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென்று காரை மறித்து தங்களை ஏற்றி செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.
அதற்கு தமிழ்செல்வன் இது கால்டாக்சி என்பதும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்தால் மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 வாலிபர்கள் தமிழ்செல்வனை மடக்கி, காரின் கதவை திறந்து வெளியே வருமாறு கூறி உள்ளனர். பின்னர் தமிழ்செல்வன் காரில் இருந்து இறங்கியதும், அவரிடம் இருந்த பணப்பை மற்றும் செல்போனை எடுத்து கொண்டனர்.
உடனே தமிழ் செல்வன்தான் வைத்திருந்த மற்றொரு செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்தார். இதனைக்கண்டதும், இரண்டுபேரும் நடுரோட்டில் வைத்து தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதில் தமிழ்செல்வனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதை சாலையில் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் செல்வன் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த வீடியோ காட்சிகளில் பதிவான காட்சிகளில் பதிவான நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story