திருப்பூரில் நடந்த பனியன் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
திருப்பூரில் நடந்த பனியன் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் கமலராஜன்(வயது 40). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கமலராஜன் கடந்த 2-ந்தேதி இரவு ஆலங்காடு பகுதியில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் சூப் குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சூப் குடிப்பது தொடர்பாக கமலராஜனுக்கும் தள்ளுவண்டி கடைக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.
அப்போது இதை பார்த்து கொண்டிருந்த ஆலங்காடு பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் கமலராஜனிடம் வந்து இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளனர். அவர்களிடமும் கமலராஜன் கைகலப்பில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த தள்ளுவண்டி கடைக்காரர் மற்றும் அந்த வாலிபர்கள் சேர்ந்து, கமலராஜனை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டுள்ளனர்.
சாக்கடை கால்வாயில் விழுந்த கமலராஜன் மயங்கிய நிலையில் சாக்கடைக்குள் கிடந்தார். அந்த வாலிபர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார், 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக ஆலங்காடு பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளிகளான விஸ்வநாதன்(23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story