கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Aug 2019 4:15 AM IST (Updated: 5 Aug 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து பனியன் தொழிலாளி பலியானார்.

திருப்பூர்,

திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரப்தீன் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து வெளியேறிய ரப்தீன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அவரை காணவில்லை.

இந்த நிலையில், ஆண் ஒருவரின் உடல் அந்த பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கிடப்பதாக தகவல் கிடை த்தது. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பொதுமக்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி அந்த உடலை மீட்டனர்.

இதன் பின்னரே, அது ரப்தீனின் உடல் என தெரியவந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் அங்கு வந்து ரப்தீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ரப்தீன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்ததாகவும், அவர் அந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story