அன்னூர் அருகே வினோதம், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்


அன்னூர் அருகே வினோதம், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே மழைவேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகேலக்கேபாளையம்என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமம்மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்கடந்த சிலமாதங்களாக சரிவரமழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி மற்றும்குடிநீர் தட்டுப்பாடுநிலவி வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கழுதைகளுக்கு திருமணம்செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதைதொடர்ந்துமழைவேண்டி சுப்பிரமணியர்திருக்கோவிலில்நேற்றுகழுதைகளுக்கு திருமணம்நடைபெற்றது.லக்கேபாளையம்பகுதியை சேர்ந்தபெண் கழுதை மணமகளாகவும், கோவில்பாளையம்கிராமத்தை சேர்ந்தஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டது.

பெண்கழுதைக்கு புடவைகட்டி, வளையல், பாசி அணிவித்து மணமகளைப்போல் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் ஆண் கழுதைக்கு வேட்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டது.இதனைதொடர்ந்துபெண்கள்ஊர்வலமாக புறப்பட்டுமணமகள்அழைப்புக்கு சீர்வரிசை தட்டுகளைஅலங்கரித்து கொண்டுவந்தனர். பின்னர் கோவிலில் வேள்வி யாகங்கள் வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, பூஜை செய்து மங்கல இசை முழுங்க பெண்கழுதைக்கு தாலிஅணிவிக்கப்பட்டது. அப்போது 2 கழுதைகளுக்கும் மாலை மாற்றப்பட்டது.

இதில்அந்த கிராமம்மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைசேர்ந்தவர்களும்திரளாக கலந்துகொண்டனர். இதன் பின்னர் மேளதாளம் முழங்க கழுதைகளைஊர்வலமாக கோவில்பாளையத்தில்உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்குஅழைத்து சென்றனர். பின்னர் சுப்பிரமணியர்கோவிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட 500-க்கும்மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாகஇந்த திருமணத்தையொட்டிபிளக்ஸ் பேனர்கள் அச்சடிக்கப்பட்டுஅந்த பகுதிமுழுவதும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் மழையே வருக...வருக... என்பதுஉள்பட பல்வேறுவாசகங்கள் இடம்பெற்று இருந்தன. நேற்றுவிடுமுறை தினம்என்பதால்இந்த திருமணவிழா குறித்துதகவல்அறிந்து அங்கு குவிந்தஅப்பகுதியைசேர்ந்த கல்லூரி மாணவர்கள்இந்த சம்பவம்முழுவதையும் வீடியோ மற்றும் படங்களாகஎடுத்து சமூகவலைத்தளத்தில்பகிர்ந்தனர். இவை நேற்று முழுவதும்வலைத்தளத்தில்வைரலாக பரவியது.

இந்த திருமணவிழா குறித்துபல்வேறுதரப்பினரும் தங்கள்கருத்துக்களை சமூகவலைத்தளத்தில்பதிவு செய்தனர்.

Next Story