முதுகுளத்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
முதுகுளத்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் கோவில் தெரு, கீழரதவீதி, சங்கராண்டி ஊருணி தெரு ஆகியவற்றில் காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்புகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் குடி நீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உப்புநீரும் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 10 வார்டுகளில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லியம்மன் கோவில் தெரு, கீழ ரத வீதி, சங்கராண்டி ஊருணி தெரு போன்றவற்றில் ஆழ்குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடலாடி-கமுதி விலக்கு சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனால் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ள மக்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே இதனை சீரமைப்பதுடன் முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு உடனடியாக இணைப்புகள் ஏற்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story