குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று தொடங்குகிறது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
ஆடி கொடை விழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து வில்லிசை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 10 மணிக்கு கும்பம் வீதி உலா வருதல் நடக்கிறது. தொடர்ந்து வில்லிசை, மகுட இசை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் வீதி உலா வருதல் நடக்கிறது. தொடர்ந்து வில்லிசை, மகுட இசை, கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் நடக்கிறது.
மஞ்சள் நீராட்டு விழா
நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 11 மணிக்கு கும்பம் வீதி உலா வருதல், வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story