பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 5 Aug 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் என்ஜினீயர் மூழ்கினார். அவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் என்ஜினீயர் மூழ்கினார். அவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

என்ஜினீயர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் சத்தியமூர்த்தி (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இவரும், அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் மொத்தம் 16 பேர் கடந்த 2-ந் தேதி இரவு புறப்பட்டு குற்றாலம் வந்தனர். பின்னர் இவர்கள் நேற்று மாலை 3 மணிக்கு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு அருவியில் 5 பேர் குளிக்க சென்றுள்ளனர். மற்ற அனைவரும் அருவிக்கு எதிரில் உள்ள ஆபத்தான தடாகத்தில் குளிக்க சென்றுள்ளனர். தடாகத்தில் தண்ணீரில் இறங்கி அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சத்தியமூர்த்தி திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.

தேடும் பணி தீவிரம்

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு மற்றும் அம்பை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அங்கு தடாகத்தில் இறங்கி சத்தியமூர்த்தியை தேடினர். இரவு 7 மணி வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

Next Story