திருப்பரங்குன்றத்தில் கத்திமுனையில் வாகன ஓட்டுனர்களை வழிமறித்து செல்போன்கள் பறிப்பு - 2 மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
திருப்பரங்குன்றத்தில் வாகன ஓட்டுனர்களை வழிமறித்து செல்போன்கள் வழிப்பறி செய்ததாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்துசெல்போன்களை பறிக்கப்பட்டன.அதனால் வாகன ஓட்டுனர்கள் பீதி அடைந்து வந்தனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் மாறுவேடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் பாலம் இறக்கத்தில் கல்யாண விநாயகர் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மதுரை பைக்கராவை சேர்ந்த விஜயராஜன் (வயது 29) பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் விஜயராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்தசெல்போனை பறித்தனர். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் விஜயராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அப்போது திருப்பரங்குன்றம் பகுதியில் சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணைசெய்தனர். அதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (19), அதே பகுதியைச் 16 மற்றும் 15 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.இதில் சந்தோஷ் மதுரை அவனியாபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும், உசிலம்பட்டியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 16 வயது சிறுவனும் படித்து வந்துள்ளனர். மற்றொரு சிறுவன் தனியார் கம்பெனியில்வேலை பார்த்து வந்துள்ளான். இவர்கள் 3 பேரும் செல்போன்களை வழிப்பறி செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story