வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்


வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 5 Aug 2019 6:22 AM GMT (Updated: 5 Aug 2019 6:22 AM GMT)

பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை கீழே காணலாம்.

வனத்துறை பணிகள்

தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் வனவர் பணிக்கு 564 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்டு 10-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.forest.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

யுனானி மையம்

மத்திய யுனானி மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு அதிகாரி பணிக்கு 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோகெமிஸ்ட்ரி, பேதாலஜி, யுனானி, கிளினிகல் பார்மகாலஜி படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கெமிஸ்ட்ரி படித்தவர்கள் ஆய்வு உதவியாளர் பணிக்கும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://ccrum.res.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை-27, ஆகஸ்டு-2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியுஸ் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

செம்பு நிறுவனம்

இந்துஸ்தான் காப்பர் எனப்படும் இந்திய செம்பு தொழிற்சாலை நிறுவனத்தில் உதவி போர்மேன், சுரங்க உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 26 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மைன் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் சுரங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவி போர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.hindustancopper.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 11-7-2019-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்.ஐ.டி.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் மணிப்பூர் கிளையில் தற்போது பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் தொழில்நுட்ப பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.nitmanipur.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-8-2019-ந் தேதியாகும்.

Next Story