ரெயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கு நேர்காணல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெற்கு மத்திய மண்டல பணி களுக்கு மொத்தம் 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது 2 ஆண்டு ஒப்பந்த அடிப் படையிலான பணியிடமாகும்.
இந்த பணியிடங்களுக்கு 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பி.எஸ்சி (ஹாஸ்பிடாலிட்டி) அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். வருகிற 14,16,19,21,24-ந் தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 5 இடங்களில் நேர்காணல் நடக்கிறது.
குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்வதுடன், தேவையான சான்று களுடன் நேர்காணலுக்குச் செல்லலாம். இது பற்றிய விவரங்களை http://www.irctc.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டுச் செல்லலாம்.
Related Tags :
Next Story