திருப்பூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 6 பேர் கைது
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக திருப்பூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூரில் இருந்து தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 1–ந் தேதி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருப்பூர்–அவினாசி ரோட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியின் பின்பகுதியில் காய்கறி மூடைகள் இருந்தன. இருப்பினும் அதிகாரிகள் அந்த லாரிக்குள் சென்று சோதனை செய்தபோது காய்கறி மூடைகளுக்கு அடியில் செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். அந்த லாரியில் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. லாரியுடன் அந்த செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 3 பேரை அதிகாரிகள் பிடித்தனர். விசாரணையில் திருப்பூர்–பல்லடம் ரோடு குங்குமபாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து பின்னர் கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2–ந் தேதி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 9.46 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடோனில் செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆவணங்களும் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை அதிகாரிகள் பிடித்தனர்.
செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த உதுமான் பாரூக்(வயது 33), சையது அப்துல் காசிம்(36), சென்னையை சேர்ந்த முபாரக்(47), கண்ணன்(25), அப்துல் ரகுமான்(39), தமிம் அன்சாரி(36) ஆகிய 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
இவர்களிடம் இருந்து 1 லாரி மற்றும் 2 கார்கள், 11.46 டன் செம்மரக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செம்மரக்கட்டைகள் எங்கிருந்து வெட்டி கொண்டு வரப்பட்டன?. இதற்கு உடந்தையாக உள்ளவர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, திருப்பூர் பனியன் தொழில் நகராக இருப்பதால் கன்டெய்னர் லாரிகள் மூலமாக வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைப்பது வழக்கம். லாரியின் மூன்றில் ஒரு பகுதியை மறைத்து அதில் மட்டும் காய்கறிகள் மற்றும் பனியன் துணிகளை வைத்து, மீதம் உள்ள 2 பகுதியில் செம்மரக்கட்டைகளை அடுக்கி கடத்திச்சென்றுள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் பகுதியில் அதிக அளவில் கன்டெய்னர் லாரிகள் தூத்துக்குடி துறைமுகம் செல்வதால் அதை பயன்படுத்தி இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Related Tags :
Next Story