அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் கிராமமக்கள் மனு


அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 5 Aug 2019 11:00 PM GMT (Updated: 5 Aug 2019 5:39 PM GMT)

அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதால் ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் வெள்ளக்குடி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் அருகே வெள்ளக்குடி கிராமத்தில் 28 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகே ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேமிப்பு கிடங்கு கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு கிடங்கில் எரிவாயு கசிவால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மேலும் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த கருவை மரங்கள் எரிந்து நாசமாகின.

இதனால் எப்போது என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இரவு நேரங்களில் திறந்துவிடப்படும் ஒரு வித வாயுவால் துர்நாற்றம் வீசுவதோடு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story