தொண்டு நிறுவனம் பெயரில் பணம் வசூலித்த டி.வி. நடிகர் கைது நண்பரும் சிக்கினார்


தொண்டு நிறுவனம் பெயரில் பணம் வசூலித்த டி.வி. நடிகர் கைது நண்பரும் சிக்கினார்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:30 AM IST (Updated: 6 Aug 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெசன்ட் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயரில் பணம் வசூல் செய்ததாக டி.வி. நடிகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை அணிந்து இருந்த 2 பேர், சிறுவர், சிறுமிகளின் கல்வி சேவைக்கு என்று கூறி அங்கிருந்த பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குவந்த அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் நன்கொடை வசூலில் ஈடுபட்டிருந்த நபர்கள் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும், தங்கள் தொண்டு நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணம் வசூலிப்பில் ஈடுபட்ட 2 பேரையும் ரகசியமாக பின்தொடர்ந்த அருண்குமார், இதுபற்றி சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

டி.வி. நடிகர் கைது

இதையடுத்து இன்ஸ்பெக் டர் ஷீலாமேரி, சப்-இன்ஸ்பெக்டர் மயில்வண்னன் ஆகியோர் அடங்கிய போலீசார் பெசன்ட்நகர் கடற்கரைக்கு விரைந்துசென்று நன்கொடை வசூலிப்பில் ஈடுபட்ட 2 மோசடி நபர்களையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த சைபலிகான் (வயது 29) மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த கவுதம் (29) என்பதும், நண்பர்களான இவர்கள் தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து, அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் பிடிபட்ட சைபலிகான், டி.வி. தொடர்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது. தொண்டு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story