மத்திய அரசை கண்டித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தர்ணா


மத்திய அரசை கண்டித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Aug 2019 11:00 PM GMT (Updated: 5 Aug 2019 7:18 PM GMT)

சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், மருத்துவ கல்வியில் நெக்ஸ்ட் தேர்வை புகுத்த கூடாது, இணைப்பு படிப்புகளை ரத்து செய்ய வேண்டும், இந்திய மருத்துவ கழகத்தை ஒழிப்பதை நிறுத்த வேண்டும், தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மருத்துவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கண்டன போராட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம், 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முன்பு கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Next Story