கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் முடிவு


கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் முடிவு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:04 PM GMT (Updated: 5 Aug 2019 10:04 PM GMT)

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம், ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம், 5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், மாவீரன் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை பாதுகாக்கும் வகையில், மெயின் ரோட்டின் அருகில் புதிய வாறுகால் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து வேலாயுதபுரம் ரோடு சந்திப்பு வரையிலும் சாலை விரிவாக்க பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story