ஓட்டல் ஊழியரை கொலை செய்த 2 பேர் கைது செல்போனுக்காக கொன்றது அம்பலம்
செல்போனுக்காக ஓட்டல் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தவர் தேஜ்ராம் (வயது22). யூ-டியூபில் போஜ்புரி பாடல்களையும் பாடி வந்தார். சம்பவத்தன்று இவர் ஒரு வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
கிழக்கு விரைவு சாலை, பெரோஷ் ஷா சுரங்கப்பாதையில் வந்தபோது 3 பேர் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் தேஜ்ராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டல் ஊழியரை கொலை செய்ததாக ராஜேஸ் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர்.
விசாரணையில், மேற்படி 3 பேரும், சம்பவத்தன்று ஓட்டல் ஊழியர் உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பி வந்தபோது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது, ஓட்டல் ஊழியர் செல்போனை கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விக்ரோலி போலீஸ்நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சஞ்சய் ஜோஷி கூறுகையில், ‘‘கொள்ளை முயற்சியில் ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம்’’ என்றார்.

Related Tags :
Next Story